ஈரோடு, ஜூலை 19- விவசாயிகளை அடைத்து வைத்து கேவலப்படுத்த வேண்டாம் என ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்ட aவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முரு கேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டதால், கூட்டம் நடை பெற்ற அறை நிரம்பியது. இதனால், அறையில் நுழைவு வாயில் பகுதியில் இருக்கைகள் போடப்பட்டு விவ சாயிகள் அமர்ந்தனர். கூட்டத்தில் கடந்த மாதம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. அப்போது திடீரென எழுந்த விவசாய சங்க பிரதிநிதி ஒருவர், நம் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட தொழில் விவசாயம். இதனால், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்க வருகை புரிகின்றனர். அவர்கள் உட்கார போதிய இடவசதி இருக்கும் வகையிலான ஒரு இடத்தில் கூட் டம் நடத்தி இருக்க வேண்டும் அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தி இருக்க வேண்டும். இவ்வாறு விவசா யிகளை அடைத்து வைத்து கேவ லப்படுத்த வேண்டாம் என்றார். இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த மாவட்ட வருவாய் அலுவ லர் முருகேசன், பல ஆண்டுகளாக இங்கு கூட்டம் நடைபெறாமல் இருந் தது. நான் முயற்சி எடுத்து ஆட்சி யரின் அனுமதி பெற்று, கூட்டம் நடத்தி, உங்கள் பிரச்சனையை தீர்க்க உள்ளேன். ஆனால், நீங்கள் தேவையில்லாத வார்த்தைகளில் பேசுவதை தவீர்க்க வேண்டும் என்றார். ஆனால், விவசாய சங்க பிரதி நிதி தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தியதால், இருவருக்கு மிடையே 15 நிமிடத்துக்கு மேலாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் மற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் தலையிட்டு இருதரப்பையும் சமா தானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.