திருப்பூர், செப். 24 – தாராபுரம் பேட்டை காளிபாளை யம் பகுதியைச்சேர்ந்த அருந்ததியர் மக்கள் வீட்டுமனைப் பட்டா உள்பட அடிப்படை வசதிகள் கோரி ஆட்சிய ரகத்தில் மனு அளித்தனர். தாராபுரம், பேட்டை காளிபாளை யத்தில் 43அருந்ததியர் குடும்பத்தி னர் புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் 43 குடும்பத் தினருக்கும் பட்டா வழங்க கோரியும், திருமானூர் குடியிருக்கும் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலை யைச் சீரமைத்து தார் சாலை அமைத்து தர வேண்டும். அதோடு மேல்நிலை தொட்டி அமைத்து தருவதோடு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சமுதாய கூடம் ஒன்றை அமைத்து தரக்கோரியும் பொதுமக்கள் ஆட்சிய ரகத்தில் மனு அளித்தனர்.