tamilnadu

பொதுகழிப்பிடத்தின் பின்புறம் அங்கன்வாடி மையம் கேள்விக்குறியாகும் குழந்தைகளின் சுகாதாரம்

பொள்ளாச்சி, டிச. 1- பொள்ளாச்சி நந்தனார் காலனியில் பொதுக்கழிப்பிடம் பின்புறம் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தால் குழந்தைகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரி விக்கின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நந்தனார் காலனியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக அங்கன்வாடி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு  20 க்கும் மேற்பட்ட குழந்தைகள்  பயில்கின்றனர். ஒரு பெண் காப்பாளர் மற்றும் ஒரு பெண் சமையலர் பணிபுரிந்து வருகின்றனர்.  இதுகுறித்து அப்பகுதியின் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நந்தனார் கால னியின் கிளை செயலாளர் த.சக்திவேல்  கூறுகையில், நந்தனார் காலனியில் உள்ள பொதுகழிப்பிடத்தின் பின்புறம் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கடு மையான துர்நாற்றத்திற்கு நடுவே அங் கன்வாடி மையத்தில் உணவு சமைக்கப் பட்டு அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் அவலம் கடந்த சில ஆண்டுகளாக நீடிக்கி றது. இது தீண்டாமையின் நவீன வடிவமா கத் தெரிகிறது.  மேலும் அங்கன்வாடி மையத்தின் முன்பு பொள்ளாச்சி  நகராட்சியினர் பொதுக்குப்பைத் தொட்டியினை அமைத் துள்ளனர். இதனால் குழந்தைகளின் சுகாதாரம் மேலும் கேள்விக்குறியாகி உள் ளது. ஆகவே அங்கன் வாடி மையத்தினை பழைய கட்டிடத்திற்கே மாற்றம் செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் தலைமையில் இதனைக் கண்டித்து மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;