tamilnadu

img

அவிநாசி அரசு பள்ளிக்கு அமெரிக்க மாணவர் நிதி உதவி

அவிநாசி, செப். 20- அமெரிக்காவில் வசிக் கும் இந்திய மாணவர் அவிநாசி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள் ளிக்கு ரூ.80 ஆயிரம் நிதி  உதவி வழங்கினார். திண்டுக்கல் மாவட் டம், கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் கள் தியாகராஜன் – லிமா. இவர்களது மகன் கவின்ஜீட் (13) அமெ ரிக்காவில் படித்து வருகிறார். விடுமுறையில்  இவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவிநாசி ஒன்றியத்தில் உள்ள சுருக்கன் காட்டு புதூர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் தனது உறவினர் வீட்டிற்கு  வந்துள் ளார். அப்போது கருக்கன் காட்டுப்புதூர் அரசுப்பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்தார். அதன் படி அப்பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் வழங்கினார்.  இது குறித்து கவின் ஜீட் கூறுகையில், இது போன்ற பள்ளிகளுக்கு நிதி உதவி செய்ய  அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஆர்வமுடன் உள்ளனர். நான் அமெரிக்கா சென்றதும் இதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்றார். அரசுப் பள்ளிக்கு நிதி உதவி அளித்த அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கவின் ஜீட்டை அப்பள்ளியின் ஆசிரியர்கள், பெற் றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் பொது மக்கள் பாராட்டினார்.