ஈரோடு, ஜூலை 31- புன்னம் ஊராட்சியை வறட்சி பாதித்த ஊராட்சியாக அறிவித்து குடிநீர் பிரச்ச னைகளுக்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண வலியுறுத்தி அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சியை வறட்சி பாதித்த ஊராட்சியாக அறிவித்து அப்பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படை யில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பவானி ஆற்றங்கரையோரத் தில் தனி கிணறு வெட்டி குடிநீர் பஞ் சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1250 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் கொண்ட புன்னம் இரண்டு நியாயவிலை கடையை இரண்டாகப் பிரித்து தடையில்லாமல் பொருட்கள் வழங்க வேண்டும். ஊராட்சி முழுவதும் சாக்கடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புன்னம் ஊராட்சி அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் என். சின்னுசாமி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம், துணை தலைவர் பி. மாதையன், மாதர் சங்கத்தின் தாலுகா கமிட்டி உறுப்பினர் எம். சென்னம்மாள், சிஐடியு பெரியபாளையம் பகுதி நிர்வாகி பி. சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி புன்னம் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.