ஈரோடு, ஆக. 26- பாதாள சாக்கடை திட்ட பணி யில் ஒப்பந்ததாரர்கள் பொது மக்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி திங்களன்று ஈரோடு சூரம் பட்டி நால்ரோடு பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் முழக்க போராட் டம் நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிக ளுக்காக பொதுமக்களிடம் ஒப் பந்ததாரர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதுதொடர் பாக பொதுமக்களுக்கு மாநக ராட்சி மூலம் பணம் கொடுக்க வேண்டாம் என விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க வேண்டும். ஏற்கனவே, பொதுமக்களிடம் ஒப்பந்ததாரர்கள் வாங்கிய பணத்தை உரியவர்களிடம் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக் கடை அமைக்கும் பணிக்காக சாலைகளில் தோண்டப்பட்டுள்ள குழிகளை உடனடியாக மூடி தார்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். மேலும், சொத்து வரி உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சூரம்பட்டி நால்ரோடு பகுதி யில் தொடர் முழக்கப் போராட் டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இதை யொட்டி திங்களன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் சம்பவ இடத்தில் குவிந்த நிலையில் உடனடியாக மாநக ராட்சி நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த் தைக்கு அழைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஒப் பந்ததாரர்கள் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பணம் கேட்டு வந்தால் உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க லாம். பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டம் அடுத்த மூன்று மாதங்களில் பன்னீர் செல்வம் பூங்கா வந்தடையும், அதனைத்தொடர்ந்து வீடுகளில் நடைபெற்று வரும் குழாய்கள் இணைக்கும் பணி நிறைவு பெற்றவுடன் அனைத்து வீடுக ளுக்கும் குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் இளங் கோவன் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். அதன் பின்னர் தற்காலிகமாக தொடர் முழக்கப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட் டது. முன்னதாக, இந்த போராட்டத் திற்கு சிபிஎம் ஈரோடு நகர செய லாளர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், பி.பி.பழனிசாமி எஸ்.சுப்ர மணியன், ஈரோடு தாலுகா செய லாளர் எம்.நாச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.ராஜ் குமார், பி. லலிதா, ராஜா உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.