சென்னை,பிப்.25 தலித் பெண் வாழ்வியலை விளக்கும் மாடத்தி திரைப்படம் அவுரங்காபாத் சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளை பெற்றுள்ளது. இந்தியா ஜூரி விருதுஇஜெஃப் டோலன், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துகமார் ஆகியோருக்கான சிறந்த சினிமாட்டோகிராஃபி விருது அஜ்மினா கசீமுக்கான சிறந்த நடிகை விருது மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் கைலாசா விருது ஆகியவைகளே அந்த நான்கு விருதுகளாகும். 11 முதல் 16 மார்ச் 2020 வரை கொலம்பியாவில் நடைபெறவுள்ள லத்தின் அமெரிக்க திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்படவுள்ளது. தீண்டத்தகாதவர்கள்” என்று கருதப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்ததொரு இளம் பெண்ணைச் சுற்றி இக்கதை நடக்கிறது. தனது பிறப்பின் அடையாளத்தை ஏற்க மறுத்து, எவ்வாறு அவர் ஒரு உள்ளுர் தெய்வம் ஆகிறார் என்பதே இக் கதையாகும். இத்திரைப்படம், சாதி, பாலினம், வன்முறை மற்றும் கலாச்சாரத்தில் பொதிந்துள்ள தவறான நம்பிக்கைகளை வெளிப்படுத்துகிறது. இயக்குனர் லீனா மணிமேகலை இப்படத்தை இயக்கியுள்ளார்.