tamilnadu

ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ரூ.10 லட்சம் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

அவிநாசி, ஜன. 27- அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் பதவி ரூ.10 லட்சம் கொடுத்து பெற்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. தமிழகத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட் டங்களைத் தவிர்த்து பல மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை யடுத்து துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடை பெற்று துணை தலைவர்களும் பதவியேற்றுள்ளனர். இந் நிலையில், அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சியிலும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்று 1ஆவது வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி வெற்றி பெற் றார்‌.  இதற்கிடையில், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக் குட்பட்ட ராயன் கோயில் திடலில் குடியரசு தினத்தன்று  கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  வார்டு உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வெற்றி பெற்றதாக ஊராட்சி மன்ற துணைத்தலைவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

;