கப்பலில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தூதரகம் முயற்சி
டோக்கியோ, பிப்.15- ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நடுக் கடலிலேயே நிறுத்தப்பட்டுள் ளது. அதில் இருந்த 3 ஆயி ரத்து 711 பயணிகள், ஊழி யர்களுக்கு மருத்துவ பரி சோதனை நடத்தப்பட்டது. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. அந்த கப்பலில் இது வரை மொத்தம் 218 பேருக்கு கொரோனா வைரஸ் இருப் பது கண்டறியப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் 138 இந்தி யர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள். ஏற்கனவே சில நாட்க ளுக்கு முன்பு 2 இந்தியர் களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கப்ப லில் பணியாற்றும் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தி யர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் கூறு கையில், ‘சொகுசு கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் அனை வரையும் மீட்பதற்கான நட வடிக்கைகளில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறோம். கொரோனா வைரசால் பாதிக்கப்பட் டுள்ள 3 இந்தியர்களையும் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. அவர்களது உடல் நிலை தொடர்ந்து முன்னேற் றம் அடைந்து வருகிறது. ஜப் பான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கப்பலில் உள்ள இந்தியர்கள் நல்ல முறையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். மூன்று இந்தியர்கள் உட் பட 218 பேர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தி யதால், தனிமைப்படுத்தப் பட்ட காலம் முடிவடைந்த பின்னர், கப்பலில் இருந்த அனைத்து இந்தியர்களை யும் இறக்குவதற்கான முயற்சி களை மேற்கொண்டு வரு கிறோம் என கூறியுள்ளது. இதற்கிடையே, கப்ப லில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணி களை வெளியே அனுப்ப முடிவு செய்யப்பட்டதன்படி, வெள்ளியன்று 11 பயணிகள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.