பிஎஸ்பி எம்எல்ஏ-க்கள் வளைப்பு
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ-க்களான ராஜேந்திர குட்,ஜோகேந்திர சிங் அவானா, லக்கான் சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் கேரியா ஆகிய 6 பேரையும், காங்கிரஸ் வளைத்துப் போட்டுள்ளது. செவ்வாயன்று ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி.ஜோஷியை சந்தித்த இவர்கள், தாங்கள் 6 பேரும் காங்கிரசில் இணைந்துள்ளது குறித்த கடிதத்தை அளித்துள்ளனர். இது பகுஜன் சமாஜ்கட்சித்தலைவர் மாயாவதிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
‘மம்தா ஒரு சந்தர்ப்பவாதி’
கொல்கத்தா:
பிரதமர் மோடியை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதன்கிழமையன்று தில்லியில் சந்திக்கவுள்ள நிலையில்,சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில் தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியாகவே, மோடியை மம்தா சந்திப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மம்தா ஒரு சந்தர்ப்பவாதி என்றும் மேற்குவங்க பாஜக சாடியுள்ளது.
தலித் இளைஞர் உயிரோடு எரிப்பு
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் பாதேசா பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் என்ற மோனு (20). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர்,பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ணை காதலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சக்திகள், அபிஷேக் மனுவை, ஒருவீட்டில் அடைத்து வைத்துதாக்கியதுடன், உயிரோடு தீ வைத்துள்ளனர். இந்தஆணவப் படுகொலை தொடர்பாக, தற்போதுபெண்ணின் குடும்பத் தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.