tamilnadu

img

நீண்ட பரிசோதனைகளுக்குப் பிறகு இந்தியா வருகிறது சீன கப்பல் 

கொல்கத்தா: 
ஆசியக்கண்டத்தைத் திணறடித்து வரும் கொரோனா வைரஸால் சீனா கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. சீனாவில் மட்டும் தற்போதைய நிலவரப்படி 1300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5000-க்கும் அதிகமானோர் கவலைக்கிடமாக உள்ளனர். 
மேலும் கிழக்கு ஆசிய நாடுகளில் தாக்குதலை நடத்த கொரோனா தயார் நிலையில் உள்ளது. இதனால் தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடும் பீதியில் உள்ளனர். இதனிடையே சீன சரக்கு கப்பலான ஜீனியஸ் ஸ்டார் 19 சீனக் குழுவுடன் ஷாங்காயிலிருந்து ஜன.29-ஆம் தேதி கொல்கத்தாவிற்குப் புறப்பட்டது. 

இந்த கப்பல் இந்திய எல்லையை அடைந்த பொழுது, கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகித்த இந்தியத் துறைமுக அதிகாரிகள்  சீன கப்பலை கொல்கத்தாவிலிருந்து 120 கீ.மி தொலைவில் உள்ள சாகர் தீவில் தனிமைப்படுத்தினர். மேலும் கொல்கத்தா துறைமுகத்தை சேர்ந்த மருத்துவக்குழுவை அனுப்பி வைத்து கப்பலில் உள்ளவர்களை பரிசோதித்த பொழுது யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை என்பது தெரியவரக் கொல்கத்தா துறைமுக அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இன்று இரவுக்குள் ஜீனியஸ் ஸ்டார் கப்பல் கொல்கத்தா துறைமுகத்தில் நிலை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

;