திருவனந்தபுரம், மே 30- கேரளத்தில் ஜுன் ஒன்றாம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்காது. ஆனால், விக்டேழ்ஸ் சானல் மூலம் ஆன்லைன் வகுப்புகள் ஜுன் முதல் தேதியிலிருந்து காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய மாநில அரசு களின் முடிவைப்பொறுத்து பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளி யிடப்படும். அரசின் உத்தரவு கிடைக்கும்வரை ஆசிரி யர்களோ மாணவர்களோ பள்ளிக்கு வர வேண்டிய தில்லை. கல்வித்துறை இயக்குநர் கே.ஜீவன்பாபு தலைமையில் வெள்ளி யன்று நடந்த மாநில கல்வி தர மதிப்பீட்டுக் குழு (கியூஏபி) கூட்டத்தில் இதற் கான முடிவு மேற்கொள்ளப் பட்டது.
இந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். விக்டேழ்ஸ் சானல் மூலம் நடத்தப்படும் ஆன் லைன் வகுப்பு திட்டத்திற்கு பஸ்ட் பெல் (First Bell) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும், துவக்கப்பள்ளி மாண வர்களுக்கு அரை மணி நேரம், உயர்நிலைப் பள்ளிக்கு ஒரு மணிநேரம் மற்றும் மேல்நிலை மாண வர்களுக்கு ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பு செய்யப் படும். இணைய வசதி இல்லா தவர்களுக்கு நூலகம், குடும்பஸ்ரீ போன்றவற்றின் மூலம் இந்த வசதி செய்யப் படும். ஆன்லைன் வகுப்பு கள் குறித்து விரிவான வழி முறைகள் வெளியிடப்படும். ஆறாவது நாள் செயல் பாட்டு கணக்கீடு மற்றும் மதிப்பீடுகள் அரசு முடிவு செய்த பின்னரே நடத்தப் படும்.
ஆசிரியர்கள் பள்ளி அளவில் வேறுசில ஏற்பாடுகள் மூலம் பாடம் நடத்த தடை இல்லை. திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் ஒன்று முதல் பிளஸ் டூ வரை உள்ள வகுப்புகளுக்கு விக்டர் சானலில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும். சனி, ஞாயிறுகளில் மறு பரிசீலனை நடத்தப்படும். ஜுன் ஒன்று முதல் ஏழு வரை நடக்கும் வகுப்புகள் பரிசோதனை அடிப்படையி லானது. இந்த வகுப்புகள் ஜுன் எட்டு முதல் 14 வரை மறுபரிசீலனை செய்யப் படும். மேலும் விவரங்க ளுக்கு: www.kite.kerala.gov.in என்கிற இணைய தளத்தை அணுகலாம்.