tamilnadu

img

விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ713.20 கோடி மக்கள் பணத்தில் செலவு!

மோடி அரசு கடந்த ஆண்டு விளம்பரங்களுக்காக ரூ.713.20 கோடி ரூபாய் மக்கள் பணத்தை  செலவழித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிவந்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஜத்தின் தேசாய் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளித்த, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிட்டுள்ளதாவது

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த நிதியாண்டில் மட்டும் செய்தித்தாள்கள், மின்னணு ஊடகங்கள் மற்றும் தனது சுயவிளம்பரத்திற்காக சுமார் 713.20 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டுள்ளது.

2019-2020 க்கு இடையேயான காலத்தில் விளம்பரங்களுக்காக சராசரியாக ஒரு நாளைக்கு ரூ .1.95 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பத்திரிக்கை விளம்பரங்களுக்கு 295.05 கோடியும், இணைய ஊடகத்திற்கு 317.05 கோடியும், திறந்த வெளி விளம்பரங்களுக்கு 101.10 கோடியென மொத்த செலவின் கணக்கை பணியகத்தின் பதில் காண்பிக்கின்றது. எனினும், மத்திய அரசு சுய விளம்பரத்திற்காக வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்த செலவு குறித்து எந்தவொரு தகவலும் கொடுக்கப்படவில்லை.

ஜூன் 2019-இல், மும்பையைச் சேர்ந்த அனில் கால்கலி என்பவரது RTI-க்கு பதிலளித்த அமைச்சகம், மக்களின் வரிப்பணத்தில் 3,767.2651 கோடியை பத்திரிக்கை, இணைய, மற்றும் திறந்தவெளி ஊடக மற்றும் அச்சிட்ட சுயவிளம்பரத்திற்காக மோடி அரசு செலவழித்ததாகக் கூறியிருந்தது.

அதற்கும் முந்தைய வருடம், மே 2018-இல், கால்கலியின் மற்றுமோர் RTI-க்கு அமைச்சகம் அளித்த பதிலின் மூலம், பாஜக அரசு ஜூன் 2014-இல் பதவியேற்றதிலிருந்து ஊடக விளம்பரத்திற்காக மட்டும் 4,343.26 கோடியை இரைத்துத் தள்ளியுள்ளது தெரியவந்ததுள்ளது.