tamilnadu

img

கொரோனா போரை திசைதிருப்பும் கேரள எதிர்க்கட்சிகள்

திருவனந்தபுரிம், ஏப்.19- இந்தியாவில் முதன்முதலாக கொரோனா நோய் தொற்று ஏற்பட் டது கேரளத்தில். தடுப்பு நடவடிக்கை களை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது அம்மாநில அரசு. அதன் பகுதியாக சட்டமன்ற கூட் டத்தை உடனடியாக ரத்து செய்தது. அப்போது இந்திய நாடாளுமன்ற மும், தமிழகம் உள்ளிட்ட மாநில சட்ட மன்றங்களும் நடைபெற்றுக்கொண் டிருந்தன. அதை சுட்டிக்காட்டி கேர ளத்திலும் சட்டமன்ற கூட்டத்தை தொடருமாறு எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா அழுத்தம் கொடுத்தார். ஆனால் நிலைமை கேரள அரசின் நிலைபாடு சரி என் பதை நிரூபித்தது. நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமரே அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

கேரளத்தில் அரசு மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கள் மட்டுமல்ல, எதிர்கட்சிகளின் ஒத்து ழைப்பும் நாட்டுக்கே முன்னுதாரண மாக விளங்கியது. ஆனால், கடந்த சில நாட்களாக கேரளத்தின் காட்சிகள் மாறி வருகின்றன. காங்கிரஸ் தலை வர் ராகுல்காந்தி கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை களை பாராட்டிய அதே நேரத்தில் ரமேஷ் சென்னித்தலா குறை காண களமிறங்கினார். கொரோனா தடுப் பில் குறைகூற ஏதும் இல்லாத நிலை யில் கொரோனா குறித்த தகவல் களை பதிவு செய்யவும், பிற நாடு களின் அனுபவங்களை பகிரவும் நிய மிக்கப்பட்ட ஸ்ப்ரிங்லர் என்ற நிறு வனம் குறித்த சந்தேகத்தை எழுப்பி னார் ரமேஷ் சென்னித்தலா, 

அதற்கு பதிலளித்த கேரள முதல் வர், ஸ்ப்ரிங்லர் என்கிற நிறுவனம் மலையாளி ஒருவரால் அமெரிக்கா வை தலைமையிடமாக கொண்டு நடத்தப்படுகிறது. சுகாதார தகவல் பதிவிலும் பரிமாற்றத்திலும் உலக சுகாதார நிறுவனத்துடன் (WHO) இணைந்து பணியாற்றும் நிறுவனம். கேரளத்தில் பாதிப்பு என்றதும் இல வசமாக சேவை வழங்க ஸ்ப்ரிங்லர் முன்வந்ததை கேரள தகவல் தொழில் நுட்பத்துறை பரிசீலித்து ஏற்றுக் கொண்டது. ஆறு மாதங்களுக்கு இந்த சேவை இலவசம் எனவும், செப் டம்பர் 13 க்கு பிறகு சேவையை தொடர கட்டணம் செலுத்தினால் போதும் என 6 மாத கால இலவச சேவைக்கான ஒப்புதலை அந்த நிறுவனம் அளித் துள்ளது. கேரளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஸ்ப்ரிங்லர் அளித்த தகவல்கள் முன் அனுபவம் இல்லாத நமது தடுப்பு நட வடிக்கைகளுக்கு உதவியது என்றார். 

ஆனால், ரமேஷ் சென்னித்தலா வும், கேபிசிசி தலைவர் முல்லப் பள்ளி ராமச்சந்திரனும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு ஊடகங்களின் துணையுடன் இப்பிரச்சனையை பூதாகரமாக சித்த ரிக்க அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பினராயி விஜயன் மீது சுமத்தி வருகிறார்கள். 

காங்கிரசின் கூட்டணி (யுடிஎப்) கட்சியான முஸ்லீம்லீக் எம்எல்ஏ மீது விஜிலன்ஸ் தொடுத்துள்ள வழக்கை திசை திருப்ப ஏதேனும் ஒரு துரும்பா வது கிடைக்குமா என்பதே காங்கிர சின் கவலை. ஏனெனில் 2014இல் யுடிஎப் ஆட்சிக் காலத்தில் நடந்த லஞ்ச ஊழல் தொடர்பானது அது. அழிக்கோடு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த் தவும் பாடப்பிரிவுகளுக்கு அனுமதி பெற்றுத்தரவும் பள்ளி நிர்வாகத்திடம் ரூ.25 லட்சம் லஞ்சமாக முஸ்லீம்லீக் சட்டமன்ற உறுப்பினர் கே.எம்.ஷாஜி பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த புகாரை 2017 செப்டம் பர் 19இல் பள்ளியின் செயலாளர் பத்மராஜன் முதல்வர் பினராயி விஜ யனிடம் கொடுத்திருந்தார். புகாரை விசாரித்த விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி கே.எம்.ஷாஜி மீது எப்ஐஆர் பதிய சபாநாகரிடம் அனுமதி கோரினர். சபா நாயகர் அனுமதி அளித்தது கேரள எதிர்கட்சிகளை ஆத்திரத்தின் உச் சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. 

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்த லையும், சட்டமன்ற தேர்தலையும் ஓராண்டு காலத்துக்குள் சந்தித்தாக வேண்டும். தற்போதைய நிலையில், எல்டிஎப்புக்கு சாதகமான மன நிலையே கேரள மக்களிடம் உள்ளது. பொதுக்கல்வியிலும், பொது சுகாதா ரத்திலும் எல்டிஎப் அரசு மேற் கொண்ட சிறப்பான நடவடிக்கைகள் கொரோனா தடுப்பில் பிரதிபலிப் பதை உலகமே வியந்து பாராட்டி வருகின்றன. அதை திசை திருப்ப தயாராகி விட்டனர் கேரள எதிர்க்கட்சி யினர். அதை முறியடிக்க மக்களும் தயாராகவே உள்ளனர்.