திருவனந்தபுரம், டிச.25- பெண் குழந்தைகள் கல்வி கற்கும் சூழலை உருவாக்குவதில் கேரளம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கேரள கல்வித்துறையின் சிறப்பான செயல்பாடுகளுக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகும். கேரளத்தில் 99.5 சதவிகிதம் பெண் குழந்தைகள் மேல்நிலை கல்வியை முடித்துள்ளதாக மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் அறி விப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சராசரியான 77.5 சதவிகிதத்தைவிட இது 22 சதவிகிதம் அதிகமாகும். கேரளத்தில் பிரி-பிரைமரி என்கிற துவக்க கல்விக்குள் நுழைவதில் 60 சதவிகிதம் பெண் குழந்தைகளாவர். தேசிய அளவில் இது 32.1 சதவிகிதமாகும். இது வலுவான அடித்தளம் கொண்ட கல்வி முறையால் கேரளம் பெற்றுள்ள வெற்றிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என கல்வித்துறை அமைச்சர் சி.ரவீந்திரநாத் கூறினார்.