உளுந்தூர்பேட்டை, மார்ச் 9- தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் கள்ளக்குறிச்சி, தியாக துருகம், உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், சங்கரா புரம் ஆகிய இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண் டினா தலைமையில் நடை பெற்ற இந்த சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, செயற்குழு உறுப்பி னர்கள் பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவராகன், டி.எம். ஜெய்சங்கர், எம்.ஆறுமுகம், ஏ.வி.ஸ்டாலின்மணி, எம்.செந்தில் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பி.மணி, வை.பழனி, கே.தங்கராசு, ஆர்.ராஜவேல், மற்றும் மாவட்டக்குழு உறுப்பின ர்கள், தீக்கதிர் செய்தியா ளர்கள் எஸ்.சித்ரா, வி.சாமி நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 57 சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. மேலும் சந்தா சேர்ப்பு இயக்கம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.