tamilnadu

img

புதர் மண்டிக்கிடக்கும் சாந்தி நகர்

கிருஷ்ணகிரி, மார்ச் 5- ஓசூர் சாந்தி நகர் மேற்கு பகுதியில் உள்வட்ட  சாலை அருகில் நகரின் 5வது  தெருவும், இதன் பின்புரம் கழிவு நீர் கால்வாயும் உள்  ளது. பதினைந்து ஆண்டு களுக்கு முன்பு வரை மழைக் காலங்களில் பெரி யார் நகர், சாந்தி நகர் கிழக்குப் பகுதி தெருக்களின் மழை நீர் ஒன்று சேர்ந்து ராமநாய்க்கன் ஏரிக்கு செல்லும் பெரிய கால்வா யாக இருந்தது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிடேன்’ என்பது போல தற்போது கழிவு நீர் கால்வாயாக மாறியதுடன் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யும், கால்வாயாக கட்டப்படா மல் உள்ளதால் புதர்கள்  மண்டியும், பல நேரங்களில்  வீடுகளுக்கு வருமளவுக்கு அளவு கடந்த பாம்புகள்  எலிகள், பண்ணையாக வும்,கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசுக்க ளின் மொத்த உற்பத்தியிட மாகவும் மாறியுள்ளது.  இந்நிலை குறித்தும், இதனை சீர்படுத்த வேண்டி யும்  முன்னாள் அமைச்சர்  பாலகிருஷ்ணா ரெட்டியிட மும், மாநகராட்சி ஆணை யாளர் பாலசுப்ரமணியிட மும் பல முறை குடி யிருப்போர்கள் நலச் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், கஜேந்திரன், உட்பட பல  மனு கொடுத்தும் கிணற்றில்  போட்ட கல்லாக மாநக ராட்சி நகராத நிர்வாகமாக உள்ளது என மக்கள் கூறுகின்றனர். வீடுகள், மக்கள் இல்  லாத, தேவையற்ற இடத்திற்  கெல்லாம் சாலை, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் நிர்வாகம், மக்கள் வீடுகள், அதிகம் உள்ள இப்பகுதியை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இதனை உடனடி யாக சரி செய்து கொடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பிஜி. மூர்த்தி, சிஐடியு மாவட்டத்  தலைவர் ஸ்ரீதர்,பொருளாளர் பீட்டர் ஆகியோர் கோரிக்கை  விடுத்துள்ளனர்.