கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள எருமத்தனப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக எருமத்தனப் பள்ளி அருகே உள்ள ஏரி தண்ணீரை அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.