tamilnadu

img

இ-பாஸ் இல்லாதவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் அனுமதி மறுப்பு தொழிலாளர்கள் கடும் அவதி

கிருஷ்ணகிரி, ஜூன் 27- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனு மதி மறுக்கப்படுவதால் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் அவதி யடைந்தனர். தமிழகத்தில் கொரோனா  பரவலைத் தடுக்க கிருஷ்ண கிரி மாவட்டம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. இந்த மாவட்டம் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளதால் அந்த மாவட்டங்களிலிருந்து வரு பவர்களுக்கு புதிய கட்டுப் பாடு சனிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சில குறிப் பிட்ட நாட்களுக்கு இ-பாஸ் இல்லாதவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட எல்  லைகள் வழியாகத் தமிழ கத்திற்குள் நுழைய அனு மதி மறுக்கப்படுகிறது. இத னால் ஓசூரில் இருந்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள  அத்திப்பள்ளி, பொம்ம சந்திரா மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி தொழிற்பேட்டை களுக்கு பணிக்குச் செல்ப வர்கள் மாநில எல்லையில்  தடுக்கப்படுகின்றனர்.

கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து இ-பாஸ் இல்லாமல் ஓசூர்  வருபவர்களுக்கு சனிக்  கிழமை முதல் அனுமதி மறுக்  கப்பட்டது. இதனால் அத்திப்  பள்ளியில் இருந்து ஒசூ ருக்கு பணிக்கு வர முடியா மல் ஊழியர்கள் மாநில எல்  லையில்  சிக்கித் தவித்தனர். அதேபோல் ஓசூரி லிருந்து கர்நாடக மாநி லத்திற்குச் செல்பவர்க ளுக்கும் அனுமதி மறுக்கப்  படுவதால், பணிக்குச் செல்லும் ஊழியர்களும் செய்வதறியாது மாநில எல்லையில் திகைத்து  நின்றனர். அதேபோல் ஓசூரில் உள்ள தொழிற்பேட்டையில் செயல்படும் நிறுவனங்களில் பணியாற்றும் கர்நாடகா மக்களை தமிழக காவல் துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பினார்கள்.

;