tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள பழைய மதிகிரியில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டும், மின் விளக்குகளை முறையாக பாராமரிக்க வேண்டியும், கால்வாய் வசதி செய்து கொடுக்க வலியுறுத்தியும், குடிநீர் கேட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் மல்லேஷ் தலைமை தாங்கினார்.செயலாளர் பூபதி, மாவட்டச் செயலாளர் சுரேஷ், ஒன்றியச் செயலாளர் நாகேஷ்பாபு, பொருளாளர் அகிலேஷ்,சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பிஜி. மூர்த்தி, சிபி. ஜெயராமன், வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.