tamilnadu

img

யானைகளால் பயிர்கள் சேதம் தேன்கனிக்கோட்டையில் மக்கள் மறியல்

கிருஷ்ணகிரி, ஜன.7- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, சூளகிரி மலை, காடுகள் நிறைந்த பகுதியாகும்.  கர்நாடகாவிலிருந்து யானைகள் கூட்டம் உணவு, நீருக்காக இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.  இப்படி வரும்போதெல்லாம், வாழை தோட்டங்கள், நெல்வயல், காய்கறி தோட்டங்களை யானைகள் அழித்து நாசப்படுத்துகின்றன. மேலும் யானைகள் தாக்கி உயிரிழந்த வர்களின் எண்ணிக்கையும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.  6 மாதத்திற்கு முன்பு கூட குந்துக் கோட்டை பகுதியில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர்  யானை தாக்கி  உயிரிழந்தார். தற்போது, தேன்கனிக்கோட்டை அருகில் சாப்ராணப் பள்ளி கிரா மத்தை சேர்ந்த நாகராஜ் மகன் சுரேஷ் (35) என்பவர் தோட்டத்தில் இருந்தார். அப்போது அவரை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில் யானைகள் வருவதை தடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்களும், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தேன்கனிக்கோட்டை செக்போஸ்ட் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வட்டாட்சியர், வனத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.சேகர், வட்டச் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர்  அதிகாரி களிடம், ‘இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக வருகிறது. எனவே நவீன கருவிகளைக் கொண்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாது காப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லை. இவற்றையும் சரி செய்ய வேண்டும். யானைகளால் ஏற்படும் பயிர், உயிர் சேதங்களுக்கு இழப்பீடுகள் கொடுக்கப் படுவதில்லை. இது குறித்து சிபிஎம் சார்பில் பல முறை வலியுறுத்தி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.  எனவே உயிரிழந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.  இதற்கு அரசு அதிகாரிகள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இந்த மறியல் போராட்டத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் அனுமப்பா, நிர்வாகிகள் கணேஷ், முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;