tamilnadu

சூதாடியதாக 29 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 1- கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லட்டி ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்கார லப்பன் (32), நாகராஜ் (28), எல்லப்பா (38), ஜெய்குமார் (40), அஜீத் (21), கிருஷ்ணன் (45), நாகராஜ் (24), ராமமூர்த்தி (40), பழனி (26), மூர்த்தி (24), வெங்கடேஷ் (24), மணி (47), புட்ராஜ் (38) ஆகிய 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.  அதேபோல் பாத்தகோட்டா பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஜெகதீசன் (29), மஞ்சுநாத் (21), பரமேஸ் (19) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மத்திகிரி கால்நடை பண்ணை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரபீக் (36), அபீத் (60), சுரேஷ் (32), ரபி (27), மசூத் (32), அம்ஜத்கான் (38) ஆகிய 6 பேரையும் மத்திகிரி காவல் துறையினர் கைது செய்தனர்.  ஓசூர் டவுன் காரப்பள்ளி பப்ளிக் ஸ்கூல் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஹரீஸ் (27), தங்கமணி (30), பவன்குமார் (22), சுனில்குமார் (28) மற்றும் காரப்பள்ளி ஏரிக்கரையில் சூதாடிய சுப்பிரமணி (48), சிவக்குமார் (38), வேணுகோபால் (34) ஆகிய 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் 12 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.