கால்பந்து உலகில் கோலடிப்பதற்காக பந்தைக் கடத்துவதில் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மார் ஆகியோர் சிறந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தனி நபர்களாக மட்டுமே பந்தைக் கடத்தி கோலடிப்பார்கள். ஆனால் ஜெர்மனி, பிரான்ஸ், சிலி, இத்தாலி நாட்டைச் சேர்ந்த வீரர்கள் குழுவாகச் சேர்ந்து (ஒன்றுபட்டு) பந்தைக் கடத்தி அசத்தலாக கோலடிப்பார்கள். இந்த வேலையை இத்தாலி, ஜெர்மனி நாடுகள் சிறப்பாகச் செய்யும். குறிப்பாக ஜெர்மனி அணி பெனால்டி ஆர்க் பகுதி பக்கம் பந்தைக் கடத்த மாட்டார்கள். பெனால்டி ஆர்க்கின் வலது மற்றும் இடது பகுதி பக்கம் தான் பந்தைக் கடத்துவார்கள் கடத்தி கோலடிப்பார்கள்.