tamilnadu

img

தயார் நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரான அகமதாபா த்தில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில், ரூ.700 கோடி செலவுடன் மொடீரா என்ற பெயரில்  உலகின் மிகப்பெரிய  கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வரு கிறது. இந்த மைதானத்தின் வேலைகள் 90% நிறைவடைந்த நிலையில்,  அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்  இந்திய வருகையின் போது இம்மை தானத்தை திறந்து வைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.   இந்த மைதானத்தில் 3,000 கார்கள், 10,000 இரு சக்கர வாகனங்கள் ஒரே  நேரத்தில் பார்க்கிங் செய்யும் வசதி செய்யப்பட உள்ளது. மேலும் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளமும் மைதா னத்துக்கு உள்ளே அமைக்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டி மட்டுமின்றி கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, தடகளம், ஸ்குவாஷ், பில்லியர்ட்ஸ், பேட்மிண்ட்ன், நீச்சல் என பல விளையாட்டுத் தொடர்கள் நடத்துவதற்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தற்போதைய கிரிக்கெட் உலகில் மெல்போர்ன் மைதானம் தான் மிகப்பெரியது.  மொடீரா திறக்கப் பட்டால் மெல்போர்ன் மைதானத்தை பின்னுக்குத் தள்ளிவிடும். அந்தளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.