இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் மழை விளை யாடிய நிலையில், 2வது ஆட்டத்தில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புதனன்று நடை பெறுகிறது. தொடரைக் கைப்பற்றும் முனைப் பில் இந்திய அணியும், தொடரைச் சமன் செய்யும் முனைப்பில் விண்டீஸ் அணியும் என இரு அணிகளும் வெற்றியில் மட்டுமே குறியாக இருப்பதால் இந்த ஆட்டம் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடம் : போர்ட் ஆப் ஸ்பெயின் (டிரினிடாட்)
நேரம் : இரவு 7 மணி (இந்திய நேரம்)