மழை வருமா?
பிர்மிங்ஹாம் நகரில் புதனன்று 21 டிகிரி செல்சியஸ் வெயில் அடிக்கும் என்றாலும், பிற்பகல் நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. குளிர்ந்த காற்று அதிகம் வீசும் என்பதால் வேகப்பந்துவீச்சு கணிக்க முடியாத அளவிற்கு எகிறும்.
ஆடுகளம் எப்படி?
பிர்மிங்ஹாம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் ஆகும்.வேகம் ஓரளவு எடுபடும். சுழற்பந்து வீச்சிற்கு இங்கு வேலையில்லை.பேட்டிங்கிற்கு சாதகமானது என்றாலும் ஆடுகளத்தின் பரப்பு மிகப்பெரியதாக இருப்பதால் எல்லைக்கோட்டைக் கணித்து விளாசினால் மட்டுமே ரன் மழை பொழிய முடியும்.
உலகக்கோப்பை ஆதிக்கம்
மொத்த ஆட்டங்கள் 8 / ஆஸ்திரேலியா 6/ இங்கிலாந்து 2
இடம் : பிர்மிங்ஹாம்
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 50% 50% வாய்ப்பு
இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் எந்த அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என எளிதாக கணிக்க முடியாது என்றாலும், நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளின் ஆட்டத்திறனை உற்றுநோக்கினால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் கவாஜா, மார்ஷ் ஆகியோர் காயத்தால் விலகியது இங்கிலாந்து அணிக்கும் வெற்றிக்கான பாதை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.