tamilnadu

img

இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? இந்தியா - நியூஸி., இன்று பலப்பரீட்சை

இடம் : மான்செஸ்டர்(ஓல்ட் டிராபோர்ட்)
நேரம் : பிற்பகல் 3 மணி  

12-வது சீசன் உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. தொடரின் நடுப்பகுதியில் (மழையால்) சுவாரஸ்யம் குறைந்தாலும் இறுதிக்கட்டத்தில் (லீக் ஆட்டத்தின்) பரபரப்பு தொற்றியது.இருப்பினும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், செவ்வாயன்று அரையிறுதி ஆகிய ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதலிட அந்தஸ்துடன் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணியும், கடைசி அணியாக அரையிறுதிக்குள் காலடி வைத்த நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் செவ்வாயன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

வெற்றி 50 %:  50% வாய்ப்பு

வெற்றிவாய்ப்பு 
இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் வெற்றிவாய்ப்பு குறித்து திடமாக ஆருடம் கூற முடியாது.  குறிப்பாக நடப்பு சீசன் உலகக்கோப்பை  தொடரில் இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் மோதவில்லை ( மழையால் பாதிப்பு) என்பதால் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழை விளையாடுமா? 
மான்செஸ்டர் நகரில் 19 டிகிரி செல்ஸி யஸ் வெப்பநிலையில் வெயில் அடித்தா லும், பிற்பகல் நேரங்களில் கருமேகக் கூட்டம் (மழைக்கு அதிக வாய்ப்பு) திரள்கிறது. செவ்வாயன்றும் இதே வானிலை தான் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுடன் மழையும் சேர்ந்து விளையாட வாய்ப்புள்ளது.

ஆடுகளம் எப்படி? 
இங்கிலாந்து நாட்டின் பெரிய மைதானங்களில் இதுவும் ஒன்று. க்ரீன் பிட்ச் வகையைச் சார்ந்த இந்த மைதானத்தில் பந்துகள் தாறுமாறாக எகிறும். ரிவர்ஸ் ஸ்விங்கும் எழும்பும் என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு பல் வேறு வகையில் குடைச்சல் உருவாகும். பிற்பகல் நேரங்களில் ஆடுகளம் அதிக உயிரோட்டத்துடன் இருக்கும் என்ப தால் முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு  70% வெற்றிவாய்ப்பு உள்ளது.  

சேனல் 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (அனைத்து இந்திய மொழிகளிலும்), டிடி ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (கணக்கு  இருந்தால் இலவசம், இல்லையென் றால் 5 நிமிடம் மட்டும்), இந்திய வானொலி (சிறப்பு)

உலகக்கோப்பை ஆதிக்கம்
மொத்த ஆட்டங்கள் - 8
இந்தியா - 3
நியூஸிலாந்து - 4 
முடிவில்லை - 1