tamilnadu

img

கர்நாடக அணியிலிருந்து வினய் குமார் திடீர் விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், கர்நாடக அணியின் முன்னாள் கேப்டனுமான வினய் குமார் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தான் விளையாடிய கர்நாடக அணியிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த வினய் குமார் (35) இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ரஞ்சி கோப்பையில் புதுச்சேரி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக வினய் குமார் தெரிவித்துள்ளார்.