19 வயதிற்குட்பட்டோருக்கான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கற்கும் இந்த
தொடருக்கான அட்டவணை வியாழனன்று ஐசிசி வெளியிட்டது. அணிகள் 4 பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து, இலங்கை, ஜப்பான் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. துவக்க ஆட்டத்தில் போட்டி நடத்தும் தென்ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.