tamilnadu

img

விரைவில் திறக்கப்பட இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் மைதானம் தான் உலகின் பெரிய மைதானமாக இருந்தது. இதில் சுமார் 1,00,024 ரசிகர்கள் அமர முடியும்.  தற்போது இதை விடவும் பெரியதாக 1,10,000 பேர் அமரக்கூடிய வகையில் புதிய மைதானம் ஒன்றை குஜராத்தின் மோதிராவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிரிக்கெட் மட்டுமின்றி பாட்மிண்டன், நீச்சல், தடகளம், குத்துச்சண்டை, கபடி, ஸ்குவாஸ், ஹொக்கி என மற்ற விளையாட்டு போட்டிகளுக்கான அகாடமிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கென்று தனி மாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தின் வெளிப்புற வளாகத்தில் 3 ஆயிரம் கார்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மைதானம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.