tamilnadu

img

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் இந்திய அணி மீண்டும் சொதப்பல்

நியூஸிலாந்து நாட் டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், சனியன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  டாஸ் வென்ற நியூஸி லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் கள மிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே மயாங்க் அகர்வாலை இழந்தது. இருப் பினும் பிருத்வி ஷா (54), புஜாரா (54), விஹாரி (55) ஆகியோ ரின் அசத்தலான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையில் பயணித்த பொழு திலும், மற்ற வீரர்களின் சொதப் பலான ஆட்டத்தால் 63 ஓவர் களில் 242 ரன்களுக்கு சுருண் டது. நியூஸிலாந்து அணி தரப் பில் ஜேமிஷன் 5 விக்கெட்டு களை வீழ்த்தினார்.         பின்னர் தனது இன் னிங்ஸை தொடங்கிய நியூ ஸிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையா டியது. தொடக்க வீரர்களான லதாம் (27), பிளண்டெல் (29) ஆகியோர் நிதான வேகத்தில் ரன் சேர்க்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த் தது. தொடர்ந்து ஞாயிறன்று 2-வது நாள் ஆட்டம் நடை பெறுகிறது.