வெஸ்ட் இண்டீஸ்-இந்திய இடையிலான ஒருநாள் தொடரில், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன. இதில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக விலகிய புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.