ஐபிஎஸ் இறுதி போட்டியில், காலில் ரத்தக் காயத்துடன் விளையாடிய சென்னை அணியின் ஷேன் வாட்சன் தற்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி ஒரு ரன்னில் மும்பை அணியிடம் கோப்பையை தவறவிட்டது. அந்தப் போட்டியில் வாட்சன் ரத்தக் காயங்களுடன் விளையாடியதைப் பார்த்து சென்னை ரசிகர்கள் கண்கலங்கிவிட்டனர். இதனை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷேன் வாட்சனை பாராட்டி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்த ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த இரண்டு நாள்களாக ரசிகர்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி. மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியில் அருகே சென்றும் வெற்றிபெற முடியாமல் ஆகிவிட்டது. ஆனால், அது ஓர் அற்புதமான இறுதி ஆட்டம். மீதம் இருக்கும் அந்த ஒரு அடியையும் எடுத்து வைக்க அடுத்த வருடம் மீண்டும் வருவேன். உங்களின் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார். இவர் வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.