tamilnadu

img

ஷாகிப் அல் ஹாசன் கலக்கல் சாதனை

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹாசன் வங்கதேச அணிக்காக பேட்டிங், பந்துவீச்சு என இரண்டு பிரிவிலும் கடினமாக உழைத்து வருகிறார். இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடியுள்ள ஷாகிப் 476 ரன்கள் (2 சதம், 3 அரை சதம்) குவித்தது மட்டுமல்லாமல் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் 400 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள்  கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷாகிப் அல் ஹாசன்  படைத்துள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடரில் 1000 ரன்னை கடந்த முதல் வங்கதேச வீரர் மற்றும் உலகக்கோப்பையில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் வங்கதேச வீரர் என புதிய வரலாறு படைத்துள்ளார்.