tamilnadu

img

பரிதாபமான நிலையில் பாகிஸ்தான் அணி

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 17-வது லீக் ஆட்டம் டவுன்டன் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணிக்கு இணையாக விளையாடினாலும் பீல்டிங் பிரச்சனையால் நிறைய கேட்சுகளை தவறவிட்டு ரன் மழை பொழிய விட்டது. பந்துவீச்சில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கிடைத்த கேட்ச்களை சரியாகப் பிடித்திருந்தால் ஆஸ்திரேலிய அணியை 200 ரன்களுக்குள் புரட்டி எடுத்து வெற்றியை ருசித்திருக்கலாம். துடிப்பான பீல்டிங் இல்லாத காரணத்தினால் அந்த அணி பரிதாபமான நிலையில் தள்ளாடி வருகிறது. இதே நிலையே தொடர்ந்து நீடித்தால் அரையிறுதி வாய்ப்பு குறித்து கனவு கூட காண முடியாது.