tamilnadu

img

பாகிஸ்தான் கிரிக்கெட் : பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவராக மிஸ்பா தேர்வு

இஸ்லாமாபாத் 
                   உலகக்கோப்பை தொடருடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சி யாளர்களின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில், புதிய பயிற்சியாளர்களின் இறுதி பட்டியல் புதனன்று வெளியிடப்பட்டது. தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராகச் சிறந்த கேப்டன் எனப் பெயர்பெற்றவரும், பாகிஸ்தானின் தோனியுமான (கூல் கேப்டன்) மிஸ்பா உல் ஹக் தேர்வாகியுள்ளார். பந்துவீச்சுப் பயிற்சியாளராக வாக்கார் யூனிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 27-ஆம் தேதி இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடர் முதல் மிஸ்பா உல் ஹக், வாக்கார் யூனிஸ் அடங்கிய பயிற்சியாளர் கூட்டணி தனது பணியை துவங்குகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அசத்தலான முடிவு பாராட்டத்தக்க விஷயம் தான். ஏனென்றால் பயிற்சியாள ராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பா உல் ஹக், வாக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் சர்வதேச அனுபவத்தில் டாப்பில் உள்ள வர்கள் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் இனி பொற்காலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

;