tamilnadu

img

பாக்., கிரிக்கெட் வீரர்களுக்கு ஷாக் கொடுத்த மிஸ்பா

பிரியாணியை தொடக்கூடாது 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழுத்தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியை உலகளவில் சிறந்த அணியாக உருவாக்கும் முனைப்பில் பல அதிரடி திட்டங்களுடன் களமிறங்கியுள்ள மிஸ்பா, முதலாவதாக வீரர்களின் உடல்தகுதியில் சீர்திருத்தம் கொண்டு வர உணவு முறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.  அந்த கட்டுப்பாட்டில், “பாகிஸ்தான் வீரர்கள் இனி பிரியாணி, எண்ணெய்யில் பொறித்த உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. பார்பிகியூ மற்றும் பழங்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டும். மேலும் வீரர்கள் உணவு முறையை “லாக் புக்”  மூலம் பராமரிக்கப்பட உள்ளது. அதனைக் கடைப்பிடிக்காதவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள்” என மிஸ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மிஸ்பாவின் இந்த அதிரடி முடிவு வீரர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாகிஸ்தான் மக்களின் முக்கிய பிரதான உணவு பிரியாணி தான். இதனைத் தடை செய்ததால் பாகிஸ்தான் வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைத்துள்ளனர். பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்குப் பிரியாணி தடை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சர்பிராஸுக்கு தான் ரொம்ப பாதிப்பு...

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் “கொட்டாவி புகழ்” சர்பிராஸ் அகமது  தீவிர உணவுப்பிரியர். ஆட்டநேர இடை வெளியில் பீட்ஸா, பிரியாணி என உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டுதான் களத்திற்கு வருவார். இங்கிலாந்து உலகக்கோப்பையில் இந்திய அணிக்கெதி ரான லீக் ஆட்டத்தின் மழை இடைவேளை யில் பர்க்கரை அதிகமாக உண்டு மைதானத்தில் கொட்டாவிவிட்டு வசமாக மாட்டிக்கொண்டார். மிஸ்பாவின் பிரி யாணி தடை சர்பிராஸுக்கு தான் அதிக ஏக்கத்தை ஏற்படுத்தும்.

பார்பிகியூ என்றால் என்ன? 

பார்பிகியூ என்றால் இறைச்சியை எண்ணெய்யில் பொறிக்காமல் அடுப்பின் மேல் சல்லடை போன்ற அமைப்பில் சுட்டு (தீயில் வாட்டி) சாப்பிடும் ஒரு வகை உணவாகும். நம்மூர் பாஷையில் சொன்னால் கிரீல் சிக்கன். 


 

;