tamilnadu

img

ஐபிஎல் கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக மெக்கல்லம்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரும், முன்னாள் கேப்டனுமான பிரெண்டன் மெக்கல்லம் சமீ பத்தில் அனைத்து வித கிரிக் கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு தொலைக் காட்சி வர்ணனையாளராகக் களமிறங்குவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் பலமான அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியா ளராக  மெக்கல்லம் பொறுப்பேற்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் தான் விளையாடிய அணியி லேயே மெக்கல்லம் பயிற்சி யாளராக பணியாற்றப் போகி றார். 2008-ஆம் ஆண்டு முதல் 5 சீசன்கள் கொல்கத்தா அணிக்காக ஆடியுள்ளார். தொடக்க ஆட்டத்தில் கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணிக் காக 158 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். 2009-ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.