tamilnadu

img

7 ரன்னுக்கு 6 விக்கெட் அசத்திய குட்டி மலிங்கா

கிரிக்கெட் உலகின் யார்கர் மன்னனும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமான மலிங்கா பெயரைக் கேட்டாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் நடுங்குவார்கள். அந்தளவுக்குத் தனது மிரட்டலான யார்கர் வகை பந்துவீச்சு  மூலம் கிரிக்கெட் உலகை மிரட்டி வருகிறார்.  தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். மலிங்காவோடு யார்க்கரும் ஓய்வு பெறும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த  மதீஷா பதிரானா என்ற கல்லூரி மாணவன் மலிங்கா ஸ்டைலில் பந்துவீசி அசத்தி வருகிறார். இந்த வாரத்  தொடக்கத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான இன்டர்மீடியன் போட்டியில் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஸ்டைலில் மட்டுமல்லாமல் மலிங்கா போலவே விக்கெட் வீழ்த்துவதிலும் பதிரானா அசத்தலாக செயல்படுகிறார்.   மதீஷா பதிரானாவுக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது என்பதால் எதிர்காலத்தில் மற்றொரு மலிங்காவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.