tamilnadu

img

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முதலிடம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன்  வீராட் கோலி 928 புள்ளிகள் பெற்று  ஆஸ்திரேலியாவின்  ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி முதலிடம் பெற்றார். இதை அடுத்து, தரவரிசைப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 923 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ரஹானே 759 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் பேட்டிங் தரவரிகைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.