tamilnadu

img

காயத்திலிருந்து மீண்ட கேதார் ஜாதவ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான கேதார் ஜாதவுக்கு ஐபிஎல் தொடரில் சென்னைஅணிக்காக விளையாடிய போது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கேதார் ஜாதவ்காயம் குறித்து கவலையடைந்த இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மே 23-ஆம் தேதி வரைஜாதவுக்காக காத்திருப் போம் எனக் கூறி ஆதரவுக்கரம் நீட்டியது.இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்த்கேதாரின் உடல் நலனை 24 மணி நேரம் இடைவிடாமல் கவனித்துச் சிறப்புப் பயிற்சிஅளித்து வந்தார்.பர்ஹர்த் தின் திறமையான பயிற்சியால் உடல்நலம் தேறிய கேதார் ஜாதவ் உடல் தகுதி சோதனையிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார்.இந்நிலையில் 22-ஆம்தேதி இங்கிலாந்து செல்லும்இந்திய அணியினருடன் கேதார் ஜாதவும் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.