tamilnadu

img

ஐபிஎல் விடுவிப்பு  சென்னை அணி நிலவரம் 

 ஐபிஎல் தொடரின் 13-வது சீசன் அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டிசம்பர் 19-ஆம் தேதி நடைபெறு கிறது. ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பதற்கான காலக்கெடு அளிக்கப்படும். முதலில் வீரர்கள் விடுவிப்பு தொடர்பாக அறிக்கை அளிக்கப்பட்ட பின், அடுத்து தக்கவைப்பு தொடர்பாக அறிக்கை வெளியாகும். இந்நிலையில் விடுவிப்பதற்கான காலக்கெடு வியாழனுடன் நிறைவடைந்தது. தமிழக ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் பங்கேற்க 3.2 கோடி கைவசம் வைத்திருந்த நிலையில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் மோஹித் சர்மா (5 கோடி), சாம் பில்லிங்ஸ் (இங்கி., - 1 கோடி), டேவிட் வில்லி (இங்கி., - 2 கோடி), ஸ்காட் குஜ்ஜிலின் (நியூஸி., - 50 லட்சம்) ஆகியோரை கழற்றி விடப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள் ளன. இதன் மூலம் சென்னை அணி 10 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கலாம்.