tamilnadu

img

மிரட்டும் ஆர்ச்சர் மிரளும் ஆஸி., வீரர்கள்

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரில் தற்போது 3-வது போட்டி (மொத்தம் 5) நடைபெற்று வருகிறது.  ஜேம்ஸ் இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் ஸ்விங் ஜாம்பவான் ஆண்டர்சன் முதல் போட்டியில் காயத்தால் விலகிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலிரண்டு  ஆட்டங்களில் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை (முதல் இரண்டு போட்டி முடிவில்) வகிக்கிறது.  டிராவில் நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனுக்குப் பதிலாக இளம்புயல் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆர்ச்சர் தனது மிரட்டலான பவுன்சர் மூலம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஸ்மித் இல்லா ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் திண்றி வருகிறது. குறிப்பாகக் காயம் ஏற்படும் விதமாகப் பந்துவீசிவரும் ஆர்ச்சரின் பந்தை  தொடவே ஆஸ்திரேலிய வீரர்கள் அலறு கிறார்கள். எகிறும் ஸ்விங், பறக்கும் பவுன்சர்  பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை அள்ளி ஆஸ்திரேலிய அணி யை 179 ரன்களுக்குள் சுருள வைத்தார். ஆர்ச்சர் வீசும் பந்து எப்பொழுது ஸ்விங் ஆகும். எப்போது பவுன்சர் ஆகும் எனக் கணிப்பதற்குள் பந்து கீப்பிங் பக்கம் சென்று விடுகிறது. சிலசமயம் ஷார்ட் பிட்ச் பந்துகளும் ஸ்டெம்புக்குள் புகுந்து விடுகிறது. இவ்வாறு பல்வேறு தாக்குதலை நடத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஆர்ச்சர் மிரட்டி வருகிறார். அனுபவ வீரர் பிராட், வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகியோர் கியூவில் நின்று ஆஸ்தி ரேலிய பேட்ஸ்மென்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பந்தைத் தடுத்தால் போதும் என தடுப்பாட்டத்தை கடைப்பிடித்து வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெறுவது சற்று சிரமமான காரியம் தான் என எதிர்பார்க்கப்படுகிறது.

;