tamilnadu

img

பிங்க் பந்து - சிறப்பு பார்வை

தற்போதைய இந்திய கிரிக்கெட் உலகில்  டாப் டிரெண்டிங்கில் இருப்பது கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து தான். பொதுவாக டெஸ்ட் போட்டியில் சிவப்பு நிற பந்து தான் பயன்படுத்துவார்கள். பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தான் பிங்க் நிற பந்தைப் பயன்படுத்துகிறார்கள். இதற்குக் காரணம் இரவு நேர ஒளியின் எதிரொளிப்பு தன்மையைச் சமாளிப்பதற்குத் தான். எடை, அமைப்பு என அனைத்திலும் சிவப்பு - பிங்க் நிற பந்துகள் ஒரே நிலையைக் கொண்டிருந்தாலும், தரத்தில் பிங்க் பந்து தான் சிறந்தது.  

பிங்க் பந்தை தயாரிக்கும் தோல் (லெதர்) வேறுவிதமாக இருக்கும். உட்பொருளில் (கார்க் மற்றும் கம்பளி) மாறுபாடு கிடையாது. சிவப்பு பந்தை தயாரிக்க 2 நாட்கள் ஆகும். பிங்க் பந்தை (78 தையல்கள்) தயாரிக்க 8 நாட்கள் ஆகும். சிவப்பு பந்தில் மெழுகு பயன்படுத்துவதால் பந்து எளிதாக ஸ்விங்  ஆகும். ஒரு பக்கம் விரைவில் தேய்மானம் ஆகும். ஆனால் பிங்க் பந்தில் மெழுகிற்குப் பதில் பியு எனப்படும் பாலிஷ் (பந்துகளுக் கான) பயன்படுத்தப்படும். 40 ஓவர்கள் வரை பிங்க் பந்தின் நிறம் குறையாமல் இருக்கும். இந்த பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சிக்கலை உருவாக்கும். ரிலீஸ் மற்றும் ஸ்விங்கை தொலைநோக்கி கொண்டு கணித்தாலும் தடுமாறித் தான் ரன் குவிக்க முடியும். ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சாதகத்தை உருவாக்கும். பந்து தரையில் பிட்ச் ஆவதற்கும் இடையே வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் விக்கெட் வீழ்த்த அனைத்து வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

;