tamilnadu

img

2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட்களை இழந்து திணறும் வங்கதேச அணி

இந்தியா- வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட்களை இழந்து வங்கதேச அணி தடுமாறி விளையாடி வருகிறது.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியா அணி விளையாடும் பகல்/இரவு டெஸ்ட் போட்டியாக இந்த போட்டியில், இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.  இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தற்போது பேட்டிங் செய்து வரும் வங்க தேச அணி, 25 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 98 ரன்கள் மட்டுமே அணிக்கு சேர்த்துள்ளது. வங்கதேச அணியின் ஷத்மான் இஸ்லாம் அதிகபட்சமாக 29 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும் சேர்த்துள்ளனர். இந்திய அணியின் இஷாந்த் சர்மா 3 விக்கெட்களும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும், முகமது ஷமி 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.