tamilnadu

img

அழுவதை நிறுத்துங்கள் கில்கிறிஸ்ட்டிற்கு ஹர்பஜன் சிங் பதிலடி

கடந்த 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. சென்னையில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர் பஜன் சிங் ஹாட்ரிக் (ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே) சாதனை புரிந்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஹாட்ரிக் சாதனை புரிந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.   இந்நிகழ்வு நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் தனது டுவிட்டர் பக்கத்தில், ”டிஆர்எஸ் முறை அப்போது இல்லையே” எனப் பதிவிட்டு அதற்குக் கீழே ஒரு வீடியோ தொகுப்பையும் பதிவு செய்தார். அந்த வீடியோ தொகுப்பில் ஹர்பஜன் சிங்கின் ஹாட்ரிக் சாதனை காட்சி உள்ளது.   வீடியோ தொகுப்பு மூலம் கில்கிறிஸ்ட் உரைப்பது என்னவென்றால்,எனக்கு (கில்கிறிஸ்ட் - எல்பிடபில்யு) கொடுத்த முடிவு தவறானது. அப்பொழுது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறை இல்லை. இருந்திருந்தால் ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்க மாட்டார் என்பதை உணர்த்தும் படி கூறியுள்ளார்.   பழைய விஷயத்தை மீண்டும் கிளறிவிட்ட கில்கிறிஸ்ட்டிற்கு இந்திய ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், “முதல் பந்தில் ஆட்டமிழக்காவிட்டாலும் நீண்ட நேரம் விளையாடி இருக்க முடியும் என்று நினைத்தீர்கள். பழைய நிகழ்வை நினைத்து அழுவதை நிறுத்துங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.  18 ஆண்டுகள் காலம் கழித்து வெறுப்புணர்வினால் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.