tamilnadu

img

தி ஹண்ட்ரட் தொடரில் ஹர்பஜன் சிங் பிசிசிஐ எச்சரிக்கை

இங்கிலாந்து நாட்டில்  ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) என்ற பெயரில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.  ஓவர்கள் அடிப்படையில் அல்லாமல் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இந்த தொடரில் உள்ளூர் வீரர்கள் மற்றும் 25  வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதற்கான வரைவுப் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பெறுவதாகவும் ஏலத்தின் அடிப்படை தொகையாக ஒரு  லட்சம் பவுண்ட் (ரூ. 87லட்சம்) அறிவித்துள்ளார்.  இருப்பினும் இந்த தொடரில் பங்கேற்க பிசிசிஐ-யிடம் அனுமதி வாங்குவது சிரமமான விஷயம் என்பதால் இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக ஹர்பஜன் சிங் தனது ஓய்வை அறிவிப்பார் எனத் தெரி கிறது. யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்து தான் குளோபல் டி-20 போட்டியில் விளையாடி வருகிறார். இதே முறையை பின்பற்ற ஹர்பஜனும் தயார் நிலையில் உள்ளார்.  39 வயதாகும் ஹர்பஜன் சிங் கடைசி யாக கடந்த 2016-ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்காக விளை யாடினார். அதன்பின் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டியில் 417 விக்கெட்டுகளை யும், ஒருநாள் போட்டியில் 260 விக்கெட்டு களையும் வீழ்த்தியுள்ள ஹர்பஜன் ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்டகாலம் விளையாடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

பிசிசிஐ அனுமதி மறுப்பு

ஹர்பஜன் சிங் தி ஹண்ட்ரட் தொடரில் பங்கேற்றால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த பின்புதான் அந்த தொடரில் பங்கேற்க முடியும். இதற்கு காரணம் பிசிசிஐ விதிமுறைப்படி ஒரு வீரர் ஓய்வை அறிவிக்காமல் வெளிநாடுகளில் நடைபெறும் லீக் தொடர்களில் விளையாடக் கூடாது.  இந்த விவகாரம் தொடர்பாகப் பெயர் தெரிவிக்க விருப்பம் இல்லாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகை யில்,”தி ஹண்ட்ரட் தொடரின் வரைவுப்பட்டியலில் முன் அனுமதியின்றி ஹர்பஜன் சிங் பெயர் எப்படி  இடம்பெறும்? அவர் இப்போதும் இந்திய அணி வீரராகவே உள்ளார். பிசிசிஐ அனுமதியின்றி அவரால் வரைவுப்பட்டியலில் இடம்பெறமுடியாது. தி ஹண்ட்ரட் தொடரிலும் விளை யாட முடியாது. வெளிநாட்டு தொடர்களில் பங்குபெற ஓய்வுக்குப் பிறகும் பிசிசிஐ யிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் தி ஹண்ட்ரட் பங்கேற்பதற்காக பிசிசிஐயிடம் ஹர்பஜன் சிங் இதுவரை தடையில்லாச் சான்று கேட்கவில்லை. ஒரு வேளை வெளிநாட்டு லீக் தொடரில் வீரர்களின் பெயரை அனுமதி இன்றி சேர்த்தாலும் விளையாட முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங்கிடம் பேசியபோது தி ஹண்ட்ரட் தொடரில் பங்கேற்கும் திட்டம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

 

;