tamilnadu

img

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டனாக தோனி தேர்வு!

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் சிறந்த கேப்டனாக, முன்னாள் இந்திய கேப்டன் தோனியை ஈ.எஸ்.பி.என் கிரிக்கெட் இணையதளம் தேர்வு செய்துள்ளது. 

கிரிக்கெட் இணைய தளங்களில் மிகவும் பிரபலமான ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்போ, கடந்த 10 ஆண்டுகளில் (2010-2019) சிறந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒருநாள் போட்டி மற்றும் டி20 ஓவர் போட்டிக்கு சிறந்த கேப்டனாக தோனியை தேர்வு செய்துள்ளது. 2011-ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்று சாதித்தது. இதனால் அவரை சிறந்த கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறது. கேப்டனாக மட்டுமின்றி ஒருநாள்  மற்றும் டி-20 போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பராகவும் தேர்வாகி இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறந்த கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டி அணியில் மற்ற இந்திய வீரர்களில் விராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரும், 20 ஓவர் அணியில் விராட் கோலி, பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். விராட்கோலி ஒருநாள் போட்டியில் 11036 ரன் எடுத்துள்ளார். 20 ஓவர் ஆட்டங்களில் 8000 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 135.40 ஆகும். ரோகித்சர்மா 7991 ரன் எடுத்துள்ளார். பும்ரா 174 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இந்திய வீரர்களில் அஸ்வின் மட்டுமே இதில் இடம் பெற்றள்ளார். அவர் 362 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

மேலும் பெண்கள் கிரிக்கெட் அணியில் மித்தாலி ராஜ் மற்றும் ஜூலன் கோசுவாமி ஆகியோர் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளாக தேர்வாகி உள்ளார்.  

;