பாதி மீசை மற்றும் பாதி தாடியுடனான புகைப்படத்தை, தென்னாப்பிரிக்க அணியின் முன்னா் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னா் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 2008 முதல் 2014 வரை ஐபில் தொடரில் கொல்கத்தா அணிக்காக 98 போட்டிகளில் விளையாடி உள்ளார். காலிஸ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதி மீசை மற்றும் பாதி தாடியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வுக்காக அவர் தனது தோற்றத்தை இப்படி மாற்றி உள்ளார். மேலும் இதற்காக அவர் நிதி கொடுத்தும், திரட்டியும் வருகிறார். காலிஸின் இந்த முயற்சிக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலமாக காண்டமிருங்கள் இனம் அழிவை நோக்கி செல்வதால் அவற்றை பாதுகாக்க Save The Rhin என்ற விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. உலகில் 80 சதவீத காண்டமிருங்கள் தென்னாப்பிரிக்காவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.