tamilnadu

img

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் நியூஸிலாந்து அணி திணறல்

ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (பெர்த்) ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் ‘பாக்ஸிங் டே’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் (114) அசத்தலான சதத்தின் உதவியால் முதல் இன்னிங்ஸில்  467 ரன்கள் குவித்து (2-ஆவது நாளின் மையப்பகுதியில்) ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வாக்னர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   பின்னர் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி தொடக்கத்திலேயே திணறியது. 39 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 முக்கியமான விக்கெட்டுகளை (டாம் பிளன்டால் (15), கேப்டன் கனே வில்லியம்சன் (9)) இழந்தது.  அணியைச் சரிவிலிருந்து மீட்க தொடக்க வீரர் டாம் லதாம் (9), ராஸ்டெய்லர் (2) போராடி வருகின்றனர். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து சனியன்று 3-ஆவது நாள் நடைபெறுகிறது.

;